உருவான டெசோ முதல் உருவாகாத ஈழம் வரை

*****எமது தமிழ்தேசத்தின்
வரலாறு தெரியாத
அய்யோக்கியன்கள்
இந்த-தமிழ்தேசியன்கள்******

பகுதி-2)

“அளவில்லாத பொய்களை
பேசுகிற நபருக்கு. வரலாறு வைத்தபெயர் ‘கோய்பல்ஸ ‘ இனிமேல்
தமிழ்தேசியவாதிகள் -என்றும் வரலாறு கூறும்””

##1985-ஆம் ஆண்டு மே திங்கள் 15,16 ஆகிய நாட்களில் பெண்ணாடத்தில்
தோழர் தமிழரசனே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து முதன் முதலாக மாநாடு நடத்தினார்.

ஆனால் தமிழன் தமிழன் எனச்சொல்லிவருகிற திராவிடர் இயக்கங்களால் எந்த ஓர் பயனும் இந்த தமிழனுக்கு ஏற்படவில்லை ##

——-என்று ஆரிய்ப்பார்ப்பான ஆர் எஸ் எஸ் வெறிநாய் அமைப்பிற்கு
பிறந்த வெனல்லாம் -தன்னை தமிழ்தேசியன் எனக்கூறிகொண்டு

எமது தமிழ்தேசத்தந்தைபெரிய­­ாரும்,அவர்தம்,போர்ப­ட­ை இயக்கமான திராவிடர் கழகங்களும் ,எமது தமிழ்தேசத்தில் களம்மாடிவந்த பல வீரத்தீர வரலாற்று சம்பவங்களை,மறைந்தும்­­,திரித்தும் ,

ஒருவித த் தில்”கேவலப்பிறவி “ராஜபக்சேவின் கைக்கூலிகள் போலவும் ,
இந்த பேஸ்புக்ல -தமிழ்தேசியன்-என்கிற­­ பெயரில் வலம்வருகிறார்கள்.

அப்படியான ஒரு தமிழ்தேசியன்-தொடர்ந்­­து,கூறிவருகிற பல கேவலமான பொய் செய்திகளில் ஒன்றுதான்,மேலே உள்ளவை.இத்தகைய உளரல்களுக்கு

பிரபல எழுத்தாளரும் ஆரியப்பார்ப்பான இந்துத்துவ வெறியனுமான. மலர்மன்னன். என்பவரின் தீவிர பற்றாளராகிய கிழக்குபதிப்பகத்தின்­­
எழுத்தாளர், ஆர்.முத்துக்குமார். அவர்களால் ஆழம் மாத இதழில் மனச்சாட்சியோடு எழுதப்பட்ட

“உருவான டெசோ முதல் உருவாகாத ஈழம் வரை”

என்கிற கட்டுரையில் இப்படி சொல்கிறார்……

தற்போது விமரிசிக்கப்படும் கலைஞரும் அவர் உருவாக்கிய டெசோவும் எண்பதுகளின் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது.

இன்று கலைஞரையும் டெசோவையும் எதிர்க்கின்ற பலரும் அப்போது டெசோ என்ற ஒற்றைக்குடையின்கீழ் கலைஞருடன் கரம்கோத்து இயங்கியவர்கள். முக்கியமாக, பழ. நெடுமாறனும் வைகோவும்.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தபோத­­ும் அது உச்சத்தை எட்டியது 1983ல் நடந்த ஜூலை கலவரத்தின்போதுதான். தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுத்தளம் வலுப்பெறத் தொடங்கியதும் அதன்பிறகுதான்.

ஜூலை கலவரத்துக்குப் பிறகு கொஞ்சம் அடங்கியிருந்த தாக்குதல் 1985ல் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதும் அகதிகளாகத் தமிழகத்துக்கு வருவதும் அதிகரிக்கத் தொடங்கின. அப்போது 13 மே 1985 அன்று தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அமைப்பே தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (Tamil Eelam Supporters’ Organization). சுருக்கமாக, டெசோ.

டெசோவின் தலைவராக கலைஞரும் மற்ற உறுப்பினர்களாக க. அன்பழகன், கி.வீரமணி, பழ. நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் இருந்தனர்.

டெசோ தொடங்கப்பட்டபோது மூன்று முக்கியக் குறிக்கோள்கள் அறிவிக்கப்பட்டன. ஈழத்தமிழர் பிரச்னைகள் தீர்வதற்கு ஒரே வழி தமிழீழம் மட்டுமே என்பதை இந்தியாவின் மற்ற மாநிலங்களும் உலக நாடுகளும் உணர்வதற்கும் தக்க ஆதரவைத் திரட்டுவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுப்பது முதல் குறிக்கோள்.

தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு (புலிகளுக்கு மட்டுமல்ல) உதவுவதும் ஈழ அகதிகளுக்கு உரிய உதவிகள் கிடைக்க ஆவன செய்வதும் மற்ற குறிக்கோள்கள்.

தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தி டெசோவைச் சேர்ந்த தலைவர்களும் பேச்சாளர்களும் தமிழகம் முழுக்கத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஈழம் என்ற சொல் சென்று சேர்ந்ததன் பின்னணியில் டெசோவின் பங்களிப்பு மிக அதிகம். கலைஞர், அன்பழகன், வீரமணி, வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அந்தச் சமயத்தில்தான் இலங்கை அரசுக்கும் தமிழீழப் போராளிகளுக்கும் இடையே பூடான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்­­ சமயத்திலேயே இலங்கை ராணுவத் தாக்குதலில் தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தி வந்துசேர்ந்தது. அந்த நொடியிலேயே பேச்சுவார்த்தை முறிந்துபோனது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் தங்கியிருந்த ஈழப்போராளிகளை வெளியேற்ற முடிவுசெய்தது ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு. முக்கியமான போராளித்தலைவர்களான ஆண்டன் பாலசிங்கம், சந்திரஹாசன், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டது மத்திய அரசு.
நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியது டெசோ. 25 ஆகஸ்டு 1985 அன்று தமிழ்நாட்டில் பிரும்மாண்டமான கண்டனப் பேரணி நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட பேரணியைத்

லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட பேரணியைத் தொடர்ந்து போராளிகள் மீதான நாடு கடத்தும் உத்தரவைத் திரும்பப்பெறவேண்டும்­­ என்று பிரதமர் ராஜீவைக் கேட்டுக்கொண்டது டெசோ. நாடு கடத்தல் உத்தரவை ரத்துசெய்யக்கோரி ரயில் நிறுத்தப் போராட்டம் ஒன்றுக்கும் அழைப்புவிடுத்தது. 30 ஆகஸ்டு 1985 அன்று தமிழகத்தில் எந்த ஊரிலாவது ரயில் ஓடினால் அங்கே தமிழனே இல்லை என்று அர்த்தம் என்று பேசி போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினார் கருணாநிதி. பேரணி, மறியலைத் தொடர்ந்து நாடு கடத்தும் உத்தரவுகளைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு. இது டெசோவின் முக்கிய சாதனை.

ஈழத் தமிழர் பிரச்னைகள் குறித்து தமிழகம் தழுவிய அளவில் பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும்­­ நடத்தியது டெசோ. 1986 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மீண்டும் ஈழத்தமிழர்கள் மீது வன்முறை அதிகரித்தது. ஒரே நாளில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக 26 மார்ச் 1986 அன்று டெசோ அவசரமாகக் கூடியது. ஈழத்தமிழர் பிரச்னையை தமிழக அளவோடு நிறுத்தாமல் தேசிய அளவில் கொண்டுசெல்ல முடிவுசெய்யப்பட்டது.­­ அகில இந்தியத் தலைவர்களை வரவழைத்து, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை மதுரையில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

4 மே 1986 அன்று கூடிய மாநாட்டில் அடல் பிகாரி வாஜ்பாய், என்.டி. ராமராவ், பகுகுணா, உபேந்திரா, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முக்கியமாக, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஈழப்போராளி இயக்கங்களும் தத்தமது பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன. மாநாடு தொடங்குவதற்கு முன்னரே விடுதலைப் புலிகளுக்கும் TELO இயக்கத்தினருக்கும் இடையே மோதல்கள் நடந்ததாக செய்திகள் வந்திருந்தன.

அதன் எதிரொலியாகவே, தமிழீழத்தை வென்றெடுக்க உழைக்கும் ஈழப்போராளிகளுக்குள் ஒற்றுமை அவசியம் என்ற கருத்து மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.

உரிமைகள் பறிக்கப்பட்டு, இனப்படுகொலைக்கு ஈழத்தமிழர்கள் ஆளாக்கப்பட்டுவருகின்­­ற பிரச்னை தீர்வதற்கு தமிழீழத் தனிநாடு அமைவதைத்தவிர தகுந்த வழியில்லை என்ற உண்மையை இந்தியாவில் உள்ள அனைவரும், உலகநாடுகளும் உணரச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன் என்று மேடையில் கலைஞர் சொல்லச் சொல்ல, மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரும் அதனைத் திரும்பச்சொல்லி, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தமிழகம் சந்தித்த மிகப்பெரிய ஈழத்தமிழர் ஆதரவு மாநாடு அதுவாகத்தான் இருக்கும்.

மாநாடு முடிந்த இரண்டாவது நாள் டெலோ இயக்கத் தலைவர் சபாரத்னத்தை விடுதலைப்புலிகள் கொலை செய்தனர்.

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தைத் தெளிவுபடுத்தவேண்டும்­­. ஈழத்தில் பல போராளிக்குழுக்கள் இருந்தன.

அவர்கள் தமிழகத்தில் இயங்கியபோது ஒவ்வொரு அமைப்பை ஒவ்வொரு கட்சி ஆதரித்தது. சில அமைப்புகளை பல கட்சிகள் ஆதரித்தன. குறிப்பாக, விடுதலைப்புலிகளை எம்.ஜி.ஆர் தீவிரமாக ஆதரித்தார்.

மேலும், கி. வீரமணி, பழ.நெடுமாறன் போன்றவர்கள் ஈழப்போராளிகள் பலருடனும் தொடர்புகள் வைத்துக் கொண்டாலும் புலிகளையே தீவிரமாக ஆதரித்தனர். டெலோ இயக்கத்தை திமுகவும் கலைஞரும் ஆதரித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் பத்மநாபாவை ஆதரித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தீவிரமாக செயல்படக்கூடிய சிலர் ஈராஸ் இயக்கத்தை ஆதரித்தனர். பெருச்சித்திரனார் உள்ளிட்ட சிலர் முகுந்தன் தலைமையிலான PLOTE இயக்கத்தை ஆதரித்தனர்.

போராளிகளுக்குள் மோதல் வந்தபோது அது இங்கே கட்சிகளுக்கு இடையிலான உரசலாகவும் பார்க்கப்பட்டது. டெலோவின் சபாரத்னத்தை விடுதலைப்புலிகள் கொன்றுவிட்டார்கள் என்பதில் கலைஞருக்கு நிறைய கோபம்.

உண்மையில், சபாரத்னத்தின் கொலைக்கு முன்னால் இன்னொரு முக்கியச் சம்பவம் நடந்திருந்தது. பேச்சுவார்த்தைக்காகச­­் சென்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தளபதி லிங்கத்தை சபாரத்னம் கொடூரமான முறையில் கண்களைத் தோண்டியெடுத்துக் கொலைசெய்திருந்தார். அதன் எதிர்வினையாகவே சபாரத்னம் கொல்லப்பட்டிருந்தார்­­.

சகோதர யுத்தம்தான் ஈழப்பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் என்று இன்றைய தேதிவரை கலைஞர் கூறிவருவதற்கு அடிப்படையாக அமைந்தது இந்தப் படுகொலைதான். தான் தீவிரமாக ஆதரித்த டெலோ இயக்கத்தைச் சேர்ந்த தலைவரான சபாரத்னம் கொல்லப்பட்டது கலைஞரை பலத்த அதிருப்தியில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக டெசோவின் செயல்பாடுகள் மெல்ல மெல்ல குறைந்தன. பிறகு டெசோ அமைப்பு கலைக்கப்பட்டதாக அறிவித்துவிட்டார் கலைஞர். என்னுடனும் வீரமணியுடனும் கலந்துபேசாமல் தன்னிச்சையாக டெசோவைக் கலைத்துவிட்டார் கலைஞர் என்று விமரிசனம் செய்தார் பழ. நெடுமாறன்.

இடைப்பட்ட காலத்தில் பல அரசியல் மாற்றங்கள். எம்.ஜி.ஆர் மரணம். ராஜீவ் கொலை. இந்தியாவிலும் இலங்கையிலும் ஆட்சி மாற்றங்கள். தமிழகத்திலும் ஆட்சி மாற்றங்கள். அமைதிப் பேச்சுவார்த்தைகள். இறுதி யுத்தம். எல்லாம் முடிந்து தற்போது ஈழத்தமிழர்கள் முள்வேலிகளுக்குள் முடங்கிக்கிடக்கிறார்­­கள்.

ஆதாரம்.(http://­­www.aazham.in/­?p=1271)

உண்மையான நிலமை இப்படி இருக்கையில் .

தமிழரசனால்தான் தமிழ்நாட்டில் ஈழாதரவு பெருகியது ,என்றும்,திராவிடர் இயக்கங்களால் ஏதும் இங்கு நடக்கவில்லை ,தமிழனுக்கு எந்த நன்மையும் இல்லை என்று “ஆண்மையற்ற”த
னமாக ஏன்?இந்த டாமில் டேசிய வியாதிகள் புலம்பவேண்டும்?

மேலும்

தோழர் தமிழரசனோடு க

களமாடிய

தோழர்கள் இணையதளத்தில்,இருந்து. அந்த தோழர்கள் என்ன சொல்கிறார்கள்

என்று பார்ப்போம்…….

1984-ல் 9 ஆண்டு சிறை வாழ்வை முடித்துக் கொண்டு வெளிவந்த அவர் மீண்டும் AMK (எ) கோதண்டராமனுடன் தொடர்பு கொண்டார். அவருடன் இந்திய விடுதலையிலிருந்து தமிழக விடுதலை குறித்து தொடர்ந்து விவாதித்து வந்தார்.

1984-ல் மே மாதம் 5-6ம் தேதிகளில் கட்சி ஒரு மாநாடு ஏற்பாடு செய்தது. ”இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை” மற்றும் ”தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு” எனும் தலைப்பில் மாநாடு பென்னாடத்தில் நடந்தது.
மாநாட்டுக்குப் பின் ML அமைப்பிலிருந்து தமிழ்நாடு கிளை அமைப்பினர் வெளியேற்றப்பட்டனர்.

திருச்சி – தென்னார்காடு உள்ளிட்ட சில மாவட்ட ML தோழர்கள் 64 பேர் கொல்லிமலையில் கூடினர். அக்கூட்டத்தில் தாங்கள் இனி தனித்து இயங்குவது என முடிவு செய்தனர். கூட்டத்திற்கான அனைத்து முன்முயற்சிகளையும் தமிழரசன், சுந்தரம், புதுவை தமிழ்ச்செல்வம், தர்மலிங்கம் போன்றோர் செய்தனர்.
இப்படியாக ML இயக்கத்திற்குள்ளான கருத்து மோதல்களை அமைப்பு வடிவில் பிளவு படுத்திய முதல் தோழர் தமிழரசனே.

1985-ல் பெரம்பூர் மாவட்டம் மீன்சுருட்டியில் ”தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்” நடத்திய கருத்தரங்கில் ”சாதி ஒழிப்பின் தேவையும், தமிழக விடுதலையும்” எனும் பொருள்பட ஓர் அறிக்கையை தமிழரசன் முன்வைத்தார்.

டெல்லியில் நடந்த அகில இந்திய அளவிலான ML குழுக்களின் ஓர் கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து தோழர் புதுவை தமிழ்ச்செல்வன், புலவர் கலியபெருமாள் இருவரும் கலந்து கொண்டு தாங்கள் ”தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி” என பங்கு கொண்டனர்.

ஆதாரம்(
http://­­kalakam1987.blogspot­.­in/2014/01/­­blog-post_30.html)

http://­­tholarbalan.blogspot­.­in/2014/04/­­blog-post_12.html

ஆகிய அந்த தோழர்கள் இணையத்தில் பார்க்கலாம்

இங்கே கவணிக்கவேண்டிய விஷயென்னவெனில்…..

1985-ம்,ஆண்டு மே ,மாதம் தேதி-15்16-என்று

அய்யோக்கின் தமிழ்தேசியவாதி-என்கிற ஒரு விருந்தாளிக்கு பிறந்த

வனால் . சொல்லப்ப

ட்டது

,பொய்யான செய்தி.என்பது தெளிவாகிறது .

ஆகவே தோழர்களே….இனிமேல் எந்த “”தமிழ்தேசியனாவது திராவிடர் கழகங்களின் வரலாறு என்று. திண்ணதை
க க்கி க்க்கனதை தின்று வைத்ததையெல்லாம் பெரியதாக கருதவேண்டாம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s