5 கணவர்கள் இருந்தாலும் 6ஆவதாக, கர்ணன் மீதும் காதல்

கிருஷ்ணரிடம் பாஞ்சாலி, “எனக்கு 5 கணவர்கள் இருந்தாலும் 6ஆவதாக, கர்ணன் மீதும் காதல், எனக்கு உண்டு!”

அஸ்தினாபுரத்துக்கு அங்க தேச அதிபதி கர்ணன், விருந்தினனாக வந்தவன், மதிய உணவுக்குப் பிறகு, களைப்பு மிகுதியால் சற்று கண்ணயர்ந்து விடுகிறான். அவன் காதோரம் சாய்ந்தும், தோள்பட்டையி ல் படிந்தும் இருக்கிற ……செல்போன் சற்று சத்தமா கச்சிணுங்குகிறது. தூக்கக் கலக்கத்தி லேயே செல்போனில்; பேசும் விசையை அழுத்தி, கர்ணன்…… அலோ என்கிறான். மறுமுனையிலிருந்து ஒலி கேட்கிறது- 

ஒலி – நான் சகாதேவன் பேசுகிறேன்-

கர்ணன்„ எந்த சகாதேவன்? (வியப்புடன்) நீ யார்.சகாதேவனா? பூலித்தேவன் நாட கத்தில் பூலித் தேவனாக நடித்த சகா தேவன்தானே?

ஒலி, இல்லையண்ணா நான் பாண்டவர் களில் ஒருவன் நகுலனுக்கும் இளையவ ன் சகாதேவன்; பாண்டுவின் கடைசி மக ன் அண்ணா,

கர்ணன்„ அண்ணனா? நான் எப்படி உனக்கு அண்ணனாக முடியும்?

சகாதேவன்„-சத்தியமாக நான் உன் சகோதரன்தான் அண்ணா!, அம்மா குந்தி தேவி உன்னைப் பார்க்க வந்தார்களே! உண்மையைச் சொல்லியிருப்பார்களே! குந்தி தேவியின் பிள்ளையல்லவா நீ?

கர்ணன் -அடடா தாய் பிள்ளை-அம்மா மகன்சொந்த பந்தமெல்லாம்இப்போது நினைவுக்கு வருகிறதா? யுத்தம் என்றதும் என் தயவு தேவைப் படுகிறது. அன்றைக்கு என்னை சொந்த சகோதரனாக பாவித்து அங்க தேசா திபதியாகவும் அமரச் செய்தவன்; என் நண்பன் துரியோதனன், இப்போது அவ னைப் பகைத்துக் கொள்ளச் சொல்லி அம் மாவும் தூது வருகிறார்; நீயும் என் கையில் தாது பார்க்கிறாய்….. எல்லாம் அந்தக்கண்ணன் செய்யும்சூது என்பது எனக்குத் தெரியும் …..

சகாதேவன்„கோபிக்காதேயண்ணா உன்னைப் போன்ற உத்தமர்கள் துரியோதனன் அணியில் இருக்கக் கூடாது- எத்தனையோ கொடை யளித்த கை உனது கை, இப்போது எங்களுக்கு அதுதான் நம்பிக் கை அதை நீட்டு அண்ணா

கர்ணன் – சகாதேவா! போதும் உன் புகழாரம், நீ தர்மன்மீது கொண் டுள்ள விசுவாசத்தின் அளவும் எனக்குத் தெரி யும்

 சகாதேவன்- தர்மண்ணாவை பேசச் சொல்லவா?

கர்ணன்,-வேண்டாம், வேண்டாம்-உங்கள் ஐவருக்கும் சேர்த்துத்தா ன் அம்மா வந்து அழுது புலம்பிக் கெஞ்சிக்கூத்தாடி விட்டுப்போய் விட்டாரே* என் முடிவில் மாற்றமே இல்லை. நான் ஒரு தடவை சொன்னால்..எத்தனை தடவைசொன்னதாக அர்த்தம் தெரியுமா ?…

சகாதேவன்„- தெரியும் அண்ணா- ஒரு நிமிஷம் பாஞ்சாலி பேசணு மாம்.

கர்ணன்„-யார்?….

சகாதேவன் – அதான்; திரௌபதி

கர்ணன்„- அதெல்லாம் வேண்டாம்- என் முடிவில் எந்த மாற்றமும் இல் லை- (அதற்கு செல்போனில் பெண் குரல் கேட்கிறது-)

பாஞ்சாலி- ஹலோ – நான்தான் பாஞ்சாலி பேசுகிறேன்…

கர்ணன்„- நான் யாருடனும் பேசத் தயாராக இல்லை…

பாஞ்சாலி„- அய்வருக்கும் தேவி அழியாத பத்தினியென்றால்; நீங்கள் பேச மறுப்பது நியாயம். நான் உண்மையில் மானசீகமாக கர்ணனாகிய தங்களுக்கும் மனைவியாக எண்ணி இருப்பவள். நீங்கள் விரும்பா விட் டாலும் நான் அப்படி விரும்பியவள்-

கர்ணன்„- என்ன புதிர்போடுகிறாய் பாஞ்சா லி?

பாஞ்சாலி„- நடந்ததைச் சொல்லி விடுகிறே ன்; கொஞ்சம் அமைதி யாகக் கேளுங்கள்.

கர்ணன்„- எல்லாம் விபரீதமாகத் தெரிகிறது, உம்; சொல்லும்மா…

பாஞ்சாலி„- பாண்டவர்களுடன் வன வாசம் செய்து வன வனாந்திர ங்களைக் கடந்து சென்றபோது- தஞ்சை மண்டலத்தில் விழுந் த மாவடி என்ற ஊரில் ஒரு பெரிய மா மரத் தடியில் ஒரு முனிவர் கடுந்தவம் செய்து கொண்டிருக்கிறhர்- அந்த மாமரத்தில் ஒரே ஒரு குண்டு மாம்பழம்- அதை அருந்த வேண் டுமென்று ஆசைப்பட்டேன். உடனே என் கணவர்களில் ஒருவரான அர்ச் சுனன் அம்பு எய்து அந்த மாம் பழத்தைக் கீழே விழச் செய்தார்.

சப்தம் கேட்டு தவமிருந்த முனிவர் விழித்துக் கொண்டு,

ஆஹா, நான் எப்போதும் சிரஞ்சீவி யாக வாழ்வதற்கு அந்த மாம்ப ழத்தைச் சாப்பிடக் காத்திருக்கி றேன்; அதற்குள் அதை அடித்துக் கீழே வீழ்த்தி விட்டீர்கள்- இதோ பிடியுங்கள் சாபம்,

மாங்கனி விழுந்தது போல் உங் கள் தலைகளும் வெட்டுண்டு கீழே விழட்டும்! என்று சாபம ளித்துக் கூக்குரலிட்டார்.

நாங்கள் பயந்து நடுங்கி, பரந் தாமனை வேண்டி அழைத்து உயிர் பிச்சை கேட்டோம்

பரந்தாமன் சொன்னார் – ……நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மன தில் ஒளித்து வைத்திருக்கும் ஓர் உண்மையைச் சொன்னால் அந்த மாங்கனி ஒவ்வொரு உண்மைக்குமாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்ந்து சென்று- மாமரக்கிளையில் ஒட்டிக் கொள்ளும். அப்படிச் செய்துவிட்டால் முனிவர் சாபத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வார் என்று கூறினார்.

உடனே தர்மர், அவர் மனத்தில் மறைத்திருந்த ஓர் உண்மையைச் சொல்லவே, ……மாங்கனி – கொ ஞ்ச தூரம் மேலே உயர்ந்தது- இப் படி பாண்டவர் ஐவரும் ஆளுக் கொரு உண்மையைச் சொன்னவுட ன், அந்தப்பழம், மரக்கிளைக்கு அரு கே போய் நின்றுவிட்டது. கிளை யில் அது ஒட்டிக் கொள்வதற்கு ஓர் உண்மைதான் பாக்கி!

கர்ணன்„- அந்த உண்மையை யார் சொல்ல வேண்டும்?

பாஞ்சாலி„- நான்தான் சொல்ல வேண்டும்- நான் மறைத்திருந்தஉண்மையென்று ஒன்றைச் சொல் லியும்கூட மாங்கனி மரக்கிளையி ல் போய் ஒட்டவில்லை. அப்படியே நின்றது நின்றபடி இருந்தது-

அப்போது பரந்தாமன் கிருஷ்ணன்கோபத்துடன் என்னை நோக்கி;

பாஞ்சாலீ, எதையோ மறைத்துப் பொய் கூறுகிறாய்- நீ அந்த உண் மையைச் சொல்லாவிட்டால்; உங்கள் அனைவரது தலைகளுக்கும் ஆபத்து என்று மிரட்டினார். அப்போது மிகவும் பயந்து போன நான், உண்மையாகவே உண்மையைச் சொல்லி விட்டேன்… மாங்கனி யும் மரத்தில் போய் ஒட்டிக் கொண்டது.

ந்த மகாமுனி சாபத்திலிருந்து நாங்க ளும் உயிர் பிழைத்தோம்…

கர்ண பிரபூ; அப்படி நான் மறைத்திருந்த அந்த உண்மை என்ன தெரியுமா?

கர்ணன்„-என்ன அது? சொன்னால்தானேதெரியும்…..

பாஞ்சாலி„- பஞ்ச பாண்டவர் ஐந்துபேர் எ னினும் எனக்கு ஆறாவ தாகக் கர்ணன்மீதும் காதல் உண்டு என்ப தே அந்த உண்மை.. கர்ணன்„-(முகத்தை வெறுப்புடன் சுளித்துக் கொண்டு) ஓ அந்த ஊர்ப் பெயர்.. விழுந்தெழுந்த மாவடி என்றிருந் து; சுருக்கமாக… விழுந்த மாவடி… என்றுஆன கதை இதுதானா? சபா ஷ்* நல்லகதை, நல்ல உண்மை*

பாஞ்சாலி„- இப்போதும் கேட்கிறே ன்- உண்மை ஜெயிக்குமா?

கர்ணன்„-உண்மை ஜெயிக்கும்-அதற்கு உதாரணத்தை இங்கேயே இப்போதே கண்டிருக்கிறேhம்- ஆனால் பாஞ்சாலியின் ஆசை ஜெயி க்காது- ஜெயிக்கவே ஜெயிக்காது.

பாஞ்சாலி„-சாரி; என் ஆசை ஜெயிக்க வேண்டாம். இந்தப் பாரதப் போரிலா வது, நீங்கள், எங்கள் பக்கம் வந்து உதவலாமே! ஏனென் றால் வென்றி டப் போவது நாங்கள்தான்….

கர்ணன்„-பாஞ்சாலியின் நம்பிக்கையைப் பாராட்டுகிறேன்-

ஆனால் ஒன்று வெற்றியினால் மட்டும் ஒருவன் பெயரும், புகழும் நிலைத்திருப்பதில்லை-மகாபாரத யுத்தம் நடைபெற்று முடிந்து-குருட்சேத்திரத்தில் பெருக்கெடுக்கப் போகும் குருதிப்புனலில் இரு தரப்பினரும் மிதந்து- இந்தப் போராட்டம் பற்றிய கதை மட் டும் வாழ்கிற போது; மனைவி யை பணயம் வைத்தாடியவன் தர்மன் என்பதும்- சாவு சதிரா டும் போர்க்களத்தில் கூட கொ டை கொடுத்த வள்ளல் கர்ண ன் என்பதும் அழியாத அத்தி யாயங்களாக இருக்கும் …

(பேசிக் கொண்டே கர்ணன் செல்போனை நிறுத்தி விடுகிறான்- பாஞ்சாலியும்- அவளது ஐந்து கணவர்களும் அலோ- ……அலோ என்றவாறு செல்போனை அழுத்திப் பார்த்து- பயனின்றி உதட்டைப் பிதுக்கிய வாறு நிற்கின்றனர்)

( மீண்டும் ……செல்போன் ஒலிக்கிறது- பாஞ்சா லியும் பாண்டவர்களும் ஆவலுடன் ஒருவருக் கொருவர் மாற்றி மாற்றி செல்போனைத் தங்கள் காதுகளில் வைத்துக்கொண்டு கேட்கிறார்கள்) (செல்போ னில் கர்ணனின் குரல்கேட்கிறது)

கர்ணன்„- ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன்- பாஞ்சாலியும் பாண்ட வர்களும் கேட்டுக் கொள் ளுங்கள்- அன்று …பாரதப் போர்† நடந்ததை இப்போது நினைவில் வைத்துக் கொண்டு ஏமாந்து போகாதீர்கள்- அந்தப் போரில் கிருஷ் ணனின் சூழ்ச்சியால் ஜெயித்து விட்டீர்கள்- அது வேறுயுகம்- திரேதா யுகமோ, துவாபர யுகமோ ஏதோ ஒரு யுகம்; இது உங்கள் பாஷைப் படி கலியுகம்- எங்கள் கருத்துப்படி ஜன நாயக யுகம் இந்த யுகத்தில் கிருஷ்ணனின் சூழ்ச்சிகளுக்கும் பாஞ் சாலியின் பசப்புகளுக்கும் இடமில்லை- அவை எடுபடாது- வெற்றி எங்களுக்குத் தான் என்ப தை உங்கள் ஆருடப்புலி சகாதேவனிடம் சொல்லி அதையும்.. கணி த்து வைக்கச் சொல்லுங்கள்-

அவன் தூது தோற்றுவிட்டதற்காக என் ஆழ்ந்த அனுதாபத்தை அவ னுக்கு தெரிவியுங்கள்… (அது கேட்டு பாஞ்சாலியும் பாண்டவர்களு ம் ஒரே குரலில் ஆ! என்று அலறுகிறார்கள்)

(கர்ணன் கலகலவென சிhpக்கிறான்) உடன்பிறப் பே, அந்தச் சிரிப் பொலியில் நானும் கண் விழி த்துக் கொண்டேன். கண்டது பாரதக் கதையின் அடிப்படையிலான கனவு என்றுணர்ந்ததுடன் அந்தக் கனவின் முடிவு, களிப்பூட்டுவதாக அமை ந்ததால்; அதனை உனக்கும் சொன்னேன். நீயும் விழித்துக் கொள்; விடியப் போகிறது* இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கருணா நிதி கடந்த 2006 ஆம் ஆண்டு, தனது உடன்பிறப்புக்களுக்கு  எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s