வே.மதிமாறனிடம் கேளுங்கள்

பொதுவாக புள்ளிகளை இணைத்தால் கோலம் வரும். ஆனால் இந்தப் புள்ளிகளை இணைத்தால் ‘நூல்’ வரும். இந்த நூல் பலபேருக்கு உடலில் இருக்கும். சில பேருக்கு மனதில் இருக்கும். இதுதான் ஆதிசங்கரர் தனது அத்துவைதைதத்தில் சொல்லியிருக்கிறாரோ?

‘நீங்கள் பாம்பாக பார்க்கும் போது கயிறு. கயிறு என்று நினைத்துப் பார்த்தால் பாம்பு’ என்று.

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

தொழிலாளர்களின் போராட்டம், பஸ் மறியல், ரயில் மறியல் என்று எப்போது பார்த்தாலும் பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடைஞ்லாக இருக்கிற இவைகளை தடை செய்து விட்டு, ஊர்வலங்களை மட்டும் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமான பகுதியில் வைத்துக் கொண்டால் என்ன?
-என்.டி.ராமன், சென்னை.

ஒதுக்குப் புறமாக என்றால் எங்கே? முதுமலை காட்டுக்குள்ளேயா? அப்புறம் அங்கேயும் வனவிலங்குகளுக்கு தொல்லையா இருக்குதுன்ணு மேனகா காந்திக்கு சொந்தக்காரங்க வந்து குறுக்கே நிப்பாங்க.

மக்கள் தங்கள் உரிமைகளை கோரி நடத்துகிற போராட்டங்களை மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடத்தும் போதே, அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இன்னும் ஒதுக்குப் புறம் என்றால், ‘நக்சலைட்டு’ன்னு முத்திரை குத்தி உள்ளே வைச்சிருவாங்க.

உண்மையில் பொது இடங்களில் பெரும் இடைஞ்சலாக இருப்பது – கோயில் திருவிழாக்கள், சாமி புறப்பாடுகள், கோயில் கும்பாபிஷேகங்கள்தான். ஆடி மாசம் வந்தா “அம்மனோட அலறல்’ சத்தம் தாங்க முடியலை.

அறுபத்தி மூவர் திருவிழான்னு பத்து நாளைக்கு ரோட்டை மடக்கி பாடாய் படுத்துறாங்க, அதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதா?

‘கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் இணைகிற மையப்புள்ளி ஒன்று இருக்கிறது’’ என்கிறார்களே, அது என்ன மையப்புள்ளி?
-க.தமிழ்க்கனல், காட்டுமன்னார்கோயில்.

 ஜாதி. முற்போக்கு அம்சங்கள் எதுவும் இல்லாதவர்கள் தங்களை நேரடியாக ஜாதி உணர்வாளர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ‘பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ்’ ன்னு பேசுற இந்த ‘நம்மாளு’ ங்கதான் ஜாதிக்கு நிறைய ரகசியப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள். அதுல ஒண்ணுதான் இந்த மையப்புள்ளி. இந்த உணர்வு பார்ப்பன…

View original post 927 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s