ஹைகூ கவிதை (Rammalar’s Weblog)

மனைவிக்குப் பயம்..!


இனிமையும் கடுமையும்

இனிமையாகப் பாடுபவன்
கழுதையாய் கத்தினான்
கூலி கேட்டு

———————

சுத்த பயம்

காது குடைய சோம்பல் பட்டவன்
வீட்டையே சுத்தம் செய்தான்
மனைவிக்குப் பயம்

————————

வாழ்த்துப் புதுமை

கல்யாணத்துக்குச் சென்றவன்
வாழ்த்திவிட்டு வந்தான்
புதுச்செருப்பு விட்டவனை!

———————

நிஜமும் நிழலும்

பிள்ளையில்லாதவளைப் பார்த்து
குழந்தை சிரித்தது
காலண்டரில்

————————-

இயற்கையின் விதி

பறவைக்குத் தெரியுமோ,
பசுமைப் புரட்சி
எச்சத்தில் விதை!

————————-

மகிழ்ச்சி

கழிவறைக்குச் சென்றவனுக்கு
வெளியில் வர மனமில்லை
கும்மென்ற நறுமணம்!

—————————
–டி.என்.இமாஜான்

ஹைகூ கவிஞருக்கு மிக நீளமாக கடிதம்…!

துணி சுமந்த கழுதை…

தொழில் சுத்தம்..!
கெட்டவனாய் இருந்தவனுக்கு
நல்ல பேர் கிடைத்தது
சினிமாவில் வில்லன்..!
—————————————————
சகிக்கவில்லை..!
துணி சுமந்த கழுதை
கொடூரமாகக் கத்தியது
அழுக்குத்துணி நாற்றம்
—————————————————–
இயல்பு
சைவம் சாப்பிட்டவன்
கோபமாய் கத்தினான்
மிருகம் போல்..!
—————————————————-
சகிப்புத் தன்மை
‘சாப்பாடு தயார்’
பலகையை நிறுத்தியவன்
பசியோடிருந்தான்..!
============================
–டி.என்.இமாஜான்

சிரிப்பே சிறப்பு’ என்றவர் சிரிக்காமலே வேலை செய்தார்…!

பொறுமை
சைவம் சாப்பிடும் ஓவியர்
அவருப்போடு வரைந்தார்
மீன் படம்
———————————————–
பதிலுக்குப் பதில்
பொய்யான கூந்தல்
புதுசாய் சூடினாள்
வாசமில்லா மலர்..!
————————————————
குரைப்பு
பக்கத்து வீட்டக்காரர்கள் சண்டை
சந்தோஷமாய் இருந்தன
இருவர் வீட்டு நாய்களும்
——————————————————
இளமை
இளமையில் கல்’ என்பதை
படிக்காமலேயே பிடித்துக்கொண்டார்
மாணிக்க கல்வியாபாரி
————————————————————-
சிரிப்பு
சிரிப்பே சிறப்பு’ என்றவர்
சிரிக்காமலே வேலை செய்தார்
நகைச்சுவை எழுத்தாளர்
===================================
–டி.என்.இமாஜன்
நகைச்சுவையான நறுக்குக் கவிதை

பொய் சொல்ல தெரியாததால்…!

மரத்தில் பெரிய பட்டாம்பூச்சி…!

—-

பட்டினிக்குப் பிறந்தவன்…ஹைகூதினந்தோறும் மலர்கிறது ரோஜா
என் கண்களில்
அவள் பிம்பம்

——————————————–

காட்சியின் உயிர்நாடி
காலத்தின் கண்ணாடி
கவிஞன்

———————————————

வாங்கியது காசு
கேட்டது நீதி
மக்களாட்சி

———————————-

பட்டினிக்குப் பிறந்தவன்
பாரினை காப்பவன்
உழவன்

———————————–

ஊரெங்கும் விழாக் கோலம்
காதுகளில் பொன்மொழிகள்
தேர்தல் நேரம்

=============================
–அ.வெங்கடேசன்

_________________

நான் ரசித்த ஹைகூ கவிதைகள்

மாயம்

என்ன மாயம் செய்தாய்
எல்லாக் கவிதைகளும்
உன்னைப் பற்றியே…!

——————–

தாமதம்

தாமதமாக வருவதும்
கூட சுகம் தான்
காத்திருந்த கோபத்தில்
காதைத் திருகுவாள்….!

———————

ஏசி

கணிப்பொறிக்கு இலவச
ஏசியாக இயக்கும்
என்னவள்..

——————

மரம்

மர வியாபாரி பார்க்கிறான்
வேர் முதல் கிளை வரை
குருவிக்கூடு நீங்கலாக

——————-

நீச்சல்
நீச்சல் தெரியாத சிறுவன்
நீர்க்குமிழிக்குள்…
கடைசி மூச்சு!

——————–

யாமிருக்க பயமேன்!!

ஆறு படை முருகன் கோவிலுக்கு
ஏழு பூட்டு,
– யாமிருக்க பயமேன்!!

——————–

எனக்கு நன்றாக தெரியும்,
நீ விரும்புவது என்னை அல்ல,
என் கவிதைகளை என்று…
ஆனால் உனக்கு தெரியுமா,
உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல,
நான் தான் என்று?

———————–

ஊடல்

நினைக்க வேண்டாம் என்று
நினைக்க நினைக்க
என் எண்ணமெல்லாம் நீயாய்

———————…

சுதந்திரம்

குண்டு துளைக்காத
கூண்டிற்குள் இருந்து
சுதந்திரப் பொன்விழா..

——————–

காதல்

யாரை காதலித்தது
இந்த மேகம்,
இப்படி அழுது
கொண்டே இருக்கிறது!!!!

———————

மெழுகுவர்த்தி

அழுது கொண்டே
இருப்பேன் நீ
அணைக்கும்வரை…

———————-

அடடே!!

பேருந்து பயணத்தில்
இயற்கை அழகை ரசிக்க
முடியவில்லை
– நடத்துனரிடம் சில்லறை பாக்கி

———————-

சாமி
சாமி சாப்பிட ஆரம்பித்தது
படைப்பதை நிறுத்தினார்கள்
பக்தர்கள் 🙂

———————-

இன எதிரி

கோடரியின் கைபிடியும்
மரம்தானே..
– இன எதிரி

———————-

வேலை

அப்பாவும் மகனும்
ஒரே வரிசையில்
வேலைவாய்ப்பு அலுவலகம்!!

———————–

கடன்

உலக வங்கியில் கடன் இந்தியாவிற்கு
ஊரெங்கும் கடன் குடிமகனுக்கு
அரசு எவ்வழியோ குடிமகனும் அவ்வழியே..

————————–

சேவிங்

சேவிங் செலவை
சேவிங் செய்பவள்
முன்னால் காதலி…

———————–

அச்சம்

புலியை விரட்டிய இனம்
கரப்பான் பூச்சிக்கு அஞ்சுகிறது
இன்றைய சில பெண்கள்;

————————–

பரிசு

விலை மதிப்பற்றது
விற்க கூடாதது
காதலி தந்த பரிசு.

————————-

பேருந்து

உன்னைப் பார்த்த நேரத்தை விட
எதிர் பார்த்த நேரமே அதிகம்
– மாநகர பேருந்து

—————————-

ரோஜா

ஒரு நிமிடம் கூட என்னை விட்டு
பிரியாதே என் உயிருக்கு ஆபத்து
என்று முள்ளிடம் கெஞ்சுகிறது
– ரோஜா

————————–

ஒருவன்

ஒருவனை காதலித்தாள்
ஒருவனை மணந்தாள்,
ஒருவனின் மனைவி ஆனாள்..
ஒருவனின் பாஸ்வோர்ட் ஆனாள்!!!

—————————

மின்மினி பூச்சிகள்

வெட்கமே இல்லை
விளக்கை அணைக்காமல்.
-மின்மினி பூச்சிகள்

————————–

மரங்கள்

அழகான பூக்கள்
ஆனால் உதிர்க்கும்
இரக்கமற்ற மரங்கள்.

——————–

கொல-
என்னை கொல்பவருக்கு
தூக்கு தண்டனை எனில்
நாட்டில் ஆளே இருக்காது
– தமிழ்

———————–

தோல்வி

காதல் தோல்வி
மலையில் இருந்து
குதித்தது
அருவி.

——————–

காதல்

காதல் – உதடுகள் உச்சரிக்கும் போது கூட
ஒட்டாமல் இருப்பது,
காமம் – உதடுகள் உச்சரிக்கும் போது கூட
ஒட்டி இருப்பது.

——————————-
தொகுத்தவர்: ஸ்ரீனிவாசன்
http://hikoo-kavithai.blogspot.in/

இருட்டை விரட்டிய தீபம்..!

இருட்டறைக்குள் தள்ளி அடைத்தேன்.
இருட்டையே விரட்டி விட்டது
தீபம்.

——————————-

பனி முத்துக்களை
இந்தக் கிண்ணத்தில் தான் சேர்த்து வைத்தேன்
எங்கே ?

——————————

திருட்டுப் பூனை
குடித்துவிட்டது
கன்றிடமிருந்து திருடிய பாலை

——————————

சிலந்தி வலையில்
சிக்கியது
பனித்துளி

———————————

ஓட்டையை அடைக்குது
ஊசி
குத்திக் குத்தி

——————————
(படித்ததில் பிடித்தது)
0

அறுவை சிகிச்சையில்லை, நயன சிகிச்சைஅறுவை சிகிச்சையில்லை
நயன சிகிச்சை …
இடம் மாறிய இதயங்கள்

——————––

வீட்டில் விரதம்
வெளியே விருந்து
ருசி கண்ட பூனை..!

——————

பையில் ஏழு பேனா
கையில் பத்திரிகை
கைநாட்டு

———————

இறுதிச் சடங்கில்
பெரும் புள்ளிகள்
தாசி வீட்டு நாய்

——————

ஆஸ்தி இல்லை
பிள்ளை பத்து..
அனாதைப் பிணம்

——————–
>கவிஞர் முத்துராமலிங்கம்
திசைகளைத் திருத்துவோம் -ஹைகூ கவிதைகள்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s