சிரிக்க முடியலையா….? -( மகளிர் நலம்)

Rammalar's Weblog

மனித பிறவியின் உயர்ந்த அம்சமாக கருதப்படுகின்ற பெண்மைக்குத்தான் அடுக்கடுக்காக எவ்வளவு சோதனைகள்?

பெண்களின் உடல் சார்ந்த சில பாதிப்புகள் அவர்களின் அன்றாட பணிகளைகூட சரியாக செய்ய முடியாத, மற்றவர்களோடு தொடர்ந்து பணியாற்ற இயலாத பிரச்சினையைகூட உண்டு பண்ணிவிடலாம். ஏன்… மற்றவர்கள் மாதிரி கல கலவென்று சிரிக்க முடியாத, தும்மல் வந்தால் தும்மி வைக்க…, இருமல் வந்தால் இரும முடியாத நிலைமையை உண்டாக்கலாம். ஆம் சில பெண்கள் சிரித்தால், இருமினால் அவர்களுக்கு சிறுநீர் அடக்க முடியாமல் உடையிலேயே கசிந்து விடலாம். இது பெண்களுக்கு மட்டுமே வரும் உடனடியாக கவனிக்க வேண்டிய நோய் பாதிப்பாகும். ஏறத்தாழ 50 சதவீதம் பெண்களுக்கு சிறுநீர் தொடர்பான பாதிப்பு ஏதேனும் ஒன்றாவது இருக்கும். முப்பது வயது கடந்த உடனேயே பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன.

சிறுநீர்க்கசிவை கட்டுப்படுத்தும் சக்தியானது குறைந்து போவதனால்தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுவாக சிறு நீர்ப்பை ஒரு ஊஞ்சல் போன்ற தசைகளினால் தாங்கப்பட்டுள்ளது. இந்த தசைகள் பிரசவத்திற்கு பின்னர் சில பெண்களுக்கு சேதமடைந்து விடலாம். மெனோபாஸ் நேரத்தில் மேலும் தளர்ச்சி அடைந்து விடும்.
சுருங்கி விரியும் தன்மை கொண்ட தசைகள் தான் சிறுநீர்க் குழாயை இறுக மூடி வைத்திருக்கும். சிறுநீர் பிரியும் நேரம் வரையிலும் இறுக பிடித்து வைத்திருக்கும். சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும். ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தர மாக…

View original post 80 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s