தமிழ் பறவைகள் (தமிழ்Birds) குழுவினர் சந்திப்பு

UYIRI

_JEG8296_700

Tamilbirds_logo_new

பறவைகள் கூட்டமாகப் பறந்து திரிவதையும், பல இடங்களிலிருந்து ஓரிடத்தில் வந்தமர்வதையும் கண்டிருப்போம். அது போலவே பறவை ஆர்வலர்கள் கூட்டம் ஒன்று 1 & 2 நவம்பர் 2014 அன்று, திண்டுக்கல், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடியது. பறவைகளின் பாதுகாப்பு, அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பு, தமிழகத்தில் தென்படும் பறவைகளின் பரவல் முதலியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் தமிழ் பறவைகள் யாஹூ குழு (Tamil Birds Yahoo Group) இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த இணைய குழு 2006ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இக்குழுவினை ஒருங்கிணைத்து நடத்துபவர் மரங்கொத்திகளைப் பற்றி ஆராய்ச்சி செய்த Dr. ஷாந்தாராம். இவர் இந்தியாவின் சிறந்த பறவையியலாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இக்குழுவில் சுமார் 630 பேர் அங்கத்தினராக இருக்கின்றனர்.

Dr. ஷாந்தாரம் கூட்டதின் நோக்கத்தைப் பற்றி விளக்குகிறார் Dr. ஷாந்தாரம் கூட்டதின் நோக்கத்தைப் பற்றி விளக்குகிறார்

பறவைகளுக்கு நாம் வகுத்த எல்லைகள் கிடையாது. அது போலவே தமிழ் பறவைகள் யாஹூ குழு என்பது தமிழர்களை மட்டுமே கொண்டதல்ல. தமிழகத்தில் தென்படும் பறவைகளைப் பற்றியும், அவற்றின் வாழிடங்கள் பற்றியும் கரிசனம் கொண்ட தமிழர்கள் அல்லாத, தமிழகத்தில் வசிக்காத பலரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். குறிப்பாக இக்கூட்டத்தினை மிகவும் முனைப்புடனும், ஆர்வத்துடனும் ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் இந்தியாவின் பறவையியலுக்கு பல வகையில் பங்களித்துக் கொண்டுள்ள J. ப்ரவீனும் ஒருவர். இவர் தமிழ் பறவை யாஹூ குழுவினைப் போலவே கேரளாவில் இயங்கிவரும் கேரளா பறவைகள் யாஹூ குழுவின் ஒருங்கிணைப்பாளர் (

View original post 509 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s