அண்ணாதுரையின் நாடகம் – வேலைக்காரி

சிலிகான் ஷெல்ஃப்

வேலைக்காரிதான் அண்ணாதுரை எழுதிய நாடகங்களில் சிறந்தது என்று சொல்கிறார்கள். படிப்பதை விட பார்க்க நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

திராவிட இயக்கத்தினர் – குறிப்பாக அண்ணாதுரை, கருணாநிதி – எழுதிய நாடகங்கள் எல்லாமே பிரச்சார நாடகங்கள்தான் என்று நினைக்கிறேன். பிரசார நோக்கம் வரிக்கு வரி தெரிந்தாலும் பார்த்த, படித்த வரையில் அண்ணாவின் எழுத்துகளில் செயற்கைத்தனம், அலங்காரத் தமிழ் ஓரளவு குறைவாக இருக்கிறது. அடுக்குமொழி வசனங்களைக் காணோம். அதெல்லாம் கருணாநிதி ஸ்பெஷல் போலிருக்கிறது. நாடகத்தில் அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் மிக அதிகம் – ஆனால் அது அந்த நாளைய நாடகங்களில் சகஜம் என்று நினைக்கிறேன்.

நாடகம் எழுதப்பட்ட காலத்தில் நிச்சயமாக சர்ச்சையை எழுப்பி இருக்கும். குறிப்பாக தன் பகைவனுக்கு மேலும் மேலும் வெற்றி என்று தெரிந்து கதாநாயகன் பேசும் வசனங்கள் மிக நன்றாக இருந்தன. நல்லவர்களுக்கு கஷ்டங்கள் ஏன் என்பது பைபிளின் ஜாப் காலத்திலிருந்தே கேட்கப்படும் கேள்விதான் என்றாலும் இங்கே ஆவேசம் வார்த்தைகளில் அப்படியே தெறிக்கிறது. காளி கடவுள் இல்லை, வெறும் கல்தான் என்று சொல்லும் இடத்தில் அந்நாளில் விசில் பரந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

வட்டிக்கு பணம் தரும் வேதாசல முதலியார். அவர் மகள் சரசா, மகன் பெயர் மறந்துவிட்டது மூர்த்தி. அவரது ஏச்சு தாங்கமுடியாமல் ஆனந்தனின் தந்தை தூக்கில் தொங்கிவிடுகிறார். ஊரிலிருந்து திரும்பி வரும் ஆனந்தன் காளிக்கு பூஜை செய்து அப்பாவின் சாவுக்கு காரணமான முதலியாரை தண்டிக்குமாறு வேண்டுகிறான். முதலியாரோ ஜமீந்தார்…

View original post 150 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s